Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம். திருச்சியில் காங்கிரசார் மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .

0

மகாத்மா காந்திஜியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு

மாவட்ட தலைவர்
எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை. நிர்வாகிகள் பங்கேற்பு.

மகாத்மா காந்திஜியின் 78வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் பயங்கரவாத மற்றும் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்வில் மாநகர் மாவட்ட துணை தலைவர்கள் சத்தியநாதன்,
ஓ பி சி அணி மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், அன்பு ஆறுமுகம், ஆடிட்டர் சுரேஷ், பாலமுருகன் கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், அழகர், வெங்கடேஷ் காந்தி, எட்வின்,அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், மனித உரிமைதுறை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், வீரய்யா, ஐடி பிரிவு லோகேஷ், அரிசி கடை டேவிட் ,கிளமெண்ட், மாணவர் காங்கிரஸ் நரேன், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், கலை பிரிவு அருள், என்ஜிஓ பிரிவு கண்ணன், டிசிடியு பிரிவு கிஷோர், தங்கவேலு, இந்திரா பெலோஷிப் பிரிவு மாரிஸ்வரி,புனிதா, சுந்தரி, வார்டு தலைவர்கள் ரஃபிக், சம்பத், பெல்ட் சரவணன், அறிவாஸ் கோவன், பாலு, வாசுதேவன், பாபு, இஸ்மாயில், அப்துல் மகித், விஜய் பக்தன், பாண்டியன், ஜாபர், அனந்த பத்ப நாதன், அப்துல், விமல்ராஜ், ஜாஹிர் உசேன், செல்வராஜ், மூர்த்தி, இப்ராஹிம்,வளன் ரோஸ், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதுபோன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது .

இந்த நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் , வக்கீல் குமாஸ்தா அண்ணா சிலை விக்டர் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.