Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்கும். வருமான வரித்துறை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.

0

'- Advertisement -

மதுரையில் வருமான வரித்துறையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரபல நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-

முதலில் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினார்.

மேலும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும். நாம் எளிமையாக தெரிந்து கொள்ள எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது. அதன் சிக்கல்கள் என்ன எவ்வாறு குழந்தைகளுக்கும் புரிவது போல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது.

அதோடு பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதில் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. இது நிறைய பேருக்கு புரிவது சிரமமாக உள்ளது.

Suresh

இது தமிழில் இருந்தால் புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும் என்று கூறினார். அதோடு நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கின்றோமோ அதை போல வரி செலுத்துவதும் நமது கடமை என்று முழுமையாக நம்புகிறேன்

. இதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இதனையடுத்து மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரியெல்லாம் கட்டுகின்றோம் ஏதாவது பெனிபிட் இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்துப் பாருங்கள் என்று கூறினார்.

நன்றாக சம்பாதித்து வருமானம் அதிகம் வரும்போது நன்றாக வரி கட்டி இருப்போம்

ஒரு காலத்திற்கு மேல் வருமானம் சரியில்லாமல் நிலையில் சரியான வரி கட்டியவர் கஷ்டத்தில் இருக்கும் போது ஏதாவது சில சலுகைகள் நீங்கள் செய்யலாம் இதனையும் நீங்கள் ஆலோசனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .

 

அதன் பின்னர் சூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி நன்றி.

 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோசமாக இருந்தது என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.