ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய வீரர்களான திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி முன்னேறியுள்ளார்கள்.
இங்கிலாந்துடனான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
திலக் வர்மா ஓரிடம் முன்னேறி 832 புள்ளிகளுடன் 2ஆம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் டிராவிஸ் ஹெட்டும் 3ஆம் இடத்தில் பிலிப் சால்ட்டும் இருக்கிறார்கள்
பந்துவீச்சில் இங்கிலாந்தின் ஆடில் ரஷித் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹார்த்திக் பாண்டியா முதலிடத்திலும், நேபாள் இரண்டாம் இடத்திலும், அக்ச்சர் பட்டேல் 12ஆம் இடத்திலும் உள்ளனர்
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை
1. டிராவிஸ் ஹெட் – 855 புள்ளிகள்
2. திலக் வர்மா -832 புள்ளிகள் (இந்தியா)
3. பிலிப் சால்ட் – 782 புள்ளிகள்
4. சூர்யகுமார் – 763 புள்ளிகள் (இந்தியா)
5. ஜாஸ் பட்லர் -749 புள்ளிகள்
ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை
1. ஆடில் ரஷித் – 718 புள்ளிகள்
2. அகீல் ஹொசைன் – 707 புள்ளிகள்
3. வனிந்து ஹசரங்கா – 698 புள்ளிகள்
4. ஆடம் ஸாம்பா – 694 புள்ளிகள்
5. வருண் சக்கரவர்த்தி – 679 புள்ளிகள் (இந்தியா)
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை :
1. ஹர்திக் பாண்டியா -255 புள்ளிகள் (இந்தியா)
12. அக்சர் பட்டேல் – 158 புள்ளிகள் ( இந்தியா)