Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரை மதிக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.

0

60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கலர் பட்டி மக்கள்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மனு அளித்தும் பயனில்லை.

திருச்சி விமான நிலையம் பகுதி குளாப்பட்டி சாலையில் அமைந்துள்ளது கலர்பட்டி. இப்பகுதியில் உள்ள 4 வீதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது:-

விமான நிலையத்திற்கு மிகவும் அருகில் உள்ளது எங்கள் கலர்பட்டி பகுதி. இப்பகுதியில் இதுநாள் வரை மாநகராட்சி நிர்வாகம் மண் சாலைகூட அமைத்து தரவில்லை.

இது தொடர்பாக மாநகராட்சி மேயரிடம் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி மனு அளித்தோம். உடனடியாக மேயர் வந்து பார்வையிட்டு சாலை வசதி அமைத்து தருகிறோம் என உறுதியளித்தார்.
உறுதி அளித்ததோடு சரி .
ஒரு ஆண்டுகள் ஆன பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் மேயரை சந்தித்து மனு அளித்தோம். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மழைக்காலங்களில் தெருக்களில் பொதுமக்கள் யாரும் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், மற்றும் வயது முதிர்ந்தோர் சகதியில் நடந்து செல்லும் போது கீழே விழுந்து கை கால் உடைந்த சம்பவங்களும் நீடிக்கிறது.

மேலும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்து 2 ஆண்டுகள் ஆகிறது. முதல்வர் தனிப்பிரிவிலிருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட கலர்பட்டி பகுதியில் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்து வந்த கடிதத்தையும் மேயர் மதிக்கவே இல்லை என கூறப்படுகிறது .

(‘முதல்வரின் தனிப்பிரிவு செல்லும் கடிதத்தை முதல்வரின் நேரடி கவனத்திற்கு சென்ற பின் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்வரின் கடிதத்தை மதிக்காமல் திருச்சி மேயர் நடந்து கொள்வது இப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது .)

 

மேலும் பாதாள சாக்கடைக்கு சாலையின் நடுவில் தொட்டி அமைத்துள்ளனர். வீடுகளுக்க இணைப்பு கொடுப்பதற்கான தொட்டியும் இதுவரை இந்த பகுதிகளில் அமைக்க வில்லை அப்பகுதியில் வாழும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.