சிறுவர்கள்,குழந்தைகளின் ஆபாச வீடியோவை வைத்து விபச்சாரம்: யூடூப்பர் திவ்யா கள்ளச்சி மற்றும் அவர் மீது புகார் அளித்த சித்ரா உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது .
யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி. கார்த்தி என்பவரை வைத்து இவர் பேசிய வீடியோக்கள் மக்களிடையே கவனம் ஈர்க்க அந்த பிரபலத்தை பயன்படுத்தி யூடியூப் சேனல்களில் பேட்டிக்கொடுத்து வந்தார்.
அந்தப்பேட்டிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவரது வீடியோக்கள் பலரால் கிண்டல் செய்யப்பட்டாலும், அதனையும் பாசிட்டிவ்வாகக் கொண்டு அடுத்தடுத்த வீடியோ போட்டு பிரபலமாகி அதிக பணம் சம்பாதித்தாக கூறப்படுகிறது.
அண்மையில் திவ்யா கள்ளச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்து அதனை படம்பிடித்து வைத்துக்கொண்டு அதனை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என திவ்யா கள்ளச்சி மிரட்டியதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப்புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்த காவல்துறை திவ்யா கள்ளச்சி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார்த்திக், ஆனந்த், சித்ரா உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
அண்மையில், சமூக ஆர்வலரான? சித்ரா என்பவர் சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
‘சமூக சீர்கேட்டிற்கு எதிரா நான் குரல் கொடுத்து வரேன். அதற்காக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திட்டு வர்றேன். அந்த சேனல் மூலமா வந்த வருமானம் 2 லட்சத்துக்கும் மேல திடீர்ன்னு காணாம போச்சு. அத யாரோ ஹேக் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சு அத கண்டுபிடிக்க பாத்தோம். அப்போ, அந்த காசு எல்லாம் திவ்யா கள்ளச்சிங்குற ஐடிக்கு போயிருந்தது தெரிஞ்சது.
அதுக்கப்புறம் அந்த லேடிய நேர்ல போய் பாக்கலாம்ன்னு போனப்போ, அவங்க நிறைய சமூக சீர்கேடான விஷயங்கள சோசியல் மீடியாவுல பதிவு பண்ணிட்டு வர்றது தெரிஞ்சது. இதபத்தி பேச போனப்போ கார்த்திக்ன்னு ஒரு யூடியூபரும் அங்க தான் இருந்தாரு. அப்போ, நான் கேட்ட கேள்விக்கெல்லாம் திமிரா பதில் சொல்லி அப்படி தான் பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணுன்னு சொன்னாங்க.
இதனால நான் அங்க இருந்து போகலாம்ன்னு முடிவு பண்ணும் போது, அங்க இருந்த குழந்தைங்க கொஞ்ச பேரு வந்து பாத்தாங்க. அவங்க எங்கள அடைச்சு வச்சு கொடும படுத்துறாங்க. பாலியல் தொந்தரவு தராங்க. சேலம் மணின்னு ஒரு யூடியூபர கொலை செய்ய சொல்லி மிரட்டுறாங்க. எங்கள பெரிய பெரிய பணக்காரங்கள்கிட்ட அனுப்பி தப்பான வேலை செய்யுறாங்க.
அதுமட்டுமில்லாம எங்கள வச்சி வீடியோ எடுத்து மிரட்டி காசு வாங்குறாங்க. திவ்யா கள்ளச்சியும், ரவுடி பேபி சூர்யாவும் செக்ஸ் சாட் குரூப் வச்சிருக்காங்க. அதுல எங்க போட்டோ போட்டு சம்பாதிக்குறாங்கன்னு புலம்புனாங்க.
அதுக்கு அப்புறம் மறுபடியும் போய், திவ்யா கள்ளச்சிகிட்ட சண்ட போட்டு போன வாங்கி பாத்தா, எக்கச்சக்க குழந்தைங்களோட ஆபாச வீடியோவ போன்ல வச்சிருக்கா. திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, செல்வராணி போன்ற யூடியூபர்ஸ் செக்ஸ் வீடியோவும் உதயா சுமதி, பிங்கி பாய்ங்குற யூடியூபர் கிட்ட ரேட் பேசுனா ஆடியோவும் வச்சிருக்கா.
திவ்யா கள்ளச்சி, சின்ன சின்ன பசங்கள கொடூரமாக அடிச்சி சித்ரவதை செஞ்சு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அத ரசிச்சிருக்கா. இத பாத்து விருதுநகர் எஸ்பி ஆபிஸ்ல போய் பாதிக்கப்பட்டவர்கள வச்சி கம்ளையன்ட் கொடுத்தோம். இப்போ வழக்கும் நடந்துகிட்டு இருக்கு .
இதுனால, தீபாங்குற லேடி எனக்கு கொலை மிரட்டல் விடுக்குறாங்க. ரவுடி பேபி சூர்யாவும், சிக்கந்தரும் என்ன ரொம்பவே மிரட்டுறாங்க. அதோட இந்த வீடியோ எல்லாம் மார்பிங்ன்னு சொல்ல சொல்லி மிரட்டுறாங்க. இதெல்லாம் ஒரு தனிப்பட்ட நபரால செய்ய முடியுமா?
இப்போ கேஸ் நடக்குதுன்னு தெரிஞ்சு திவ்யா கள்ளச்சி தலைமறைவாகிட்டா. இவ வாய தொறந்தா பலபேர் மாட்டுவாங்க. இதுனால போலீஸ் அவள சீக்கிரம் அரெஸ்ட் பண்ணி வாக்குமூலம் வாங்கனும்” என்றார்.
இந்த நிலையில், இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அண்மையில் திவ்யா கள்ளச்சிக்கு எதிராக புகார் தெரிவித்திருந்த சித்ராவையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, திவ்யா கள்ளச்சி மற்றும் கார்த்தி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரீல்ஸ் எடுப்பதற்காக வந்துள்ளனர். கார்த்தியின் நண்பரான சித்ரா அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் இணைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை எடுத்து தனக்கு அனுப்பி வைக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளார்
அதன்படி திவ்யா கள்ளச்சி, ஆனந்த் என்பவரின் உதவியுடன் இரண்டு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல் படம் எடுத்து சித்ராவிற்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை காட்டி திவ்யா கள்ளச்சியிடம் சித்ரா பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையில்தான் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.