76வது குடியரசு தின விழா நேற்று இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியிலும் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்பட பலரும் கொடியேற்றினர்.

இதில் ஒரு பகுதியாக மலைக்கோட்டை நடுசுவான்காரத்தெரு, பில்லுக்காரத்தெரு , அல்லிமால் தெரு நண்பர்கள் குழு மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா அறக்கட்டளை அமைப்பின் இளைஞரணி தலைவரும், 14 வது வார்டு அதிமுக பொருளாளர் அபூபக்கர் (எ) சேட்டான் சிறப்பாக செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.