Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் மே மாதம் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தோன்றுவார். புதிய தகவலால் பரபரப்பு.

0

'- Advertisement -

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர்.

ஆனால் இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இதனால் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் தீவிர போரை மேற்கொண்டது.

இந்தநிலையில் 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே நடந்த மிக கடுமையான போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

மேலும் பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாகவும் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியானது.

இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது.முன்னதாக பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Suresh

பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர்.

ஆனால் இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை. இதனால் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் தீவிர போரை மேற்கொண்டது.

இந்தநிலையில் 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே நடந்த மிக கடுமையான போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை சிங்கள ராணுவம் கைப்பற்றி தகனம் செய்து விட்டது.

மேலும் பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாகவும் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியானது.

இதனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் அடிக்கடி வெளியாகியபடி உள்ளது.முன்னதாக பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில மூத்த தலைவர்களும் பிரபாகரன் 2009-ல் கொல்லப்பட்டு விட்டதை உறுதி செய்கிறார்கள். இதன் காரணமாக பிரபாகரன் விஷயத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரபாகரனை யார் கண்ணிலும் படாமல் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றது பொட்டு அம்மன் தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒருசாரார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.