அமைச்சர்கள் நேரு,மகேஷ் மேயர் அன்பழகன் வசிக்கும் தெருக்களில் மதுபான கடைளை நடத்துவர்களா? அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கேள்வி.
அமைச்சர்கள் நேரு, மகேஷ் , மேயர் அன்பழகன் வசிக்கும் தெரு களில் மதுபான கடைகளை நடத்தலாமே? அமமுக கேள்வி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க,
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மலைக்கோட்டை சறுக்கு பாறையில் நடந்தது.
நிர்வாகிகள் நாகூர் மீரான், வக்கீல் பிரகாஷ், பாலாஜி தலைமை வகிக்க,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன், மாவட்ட அவை தலைவர் த ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
ஆட்சி மன்ற குழு உறுப்பினர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன் வரவேற்று பேசினார்.
தலைமை நிலைய செயலாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தொட்டியம் ராஜசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அமமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் பேசுகையில்,
மதுக்கடைகளை நடத்தியே தீருவோம் என்றால், அமைச்சர்கள் நேரு, மகேஷ் பொய்யாமொழி வசிக்கும் தெருவிலோ, மேயர் அன்பழகன் வசிக்கும் தெருவிலோ மதுபான கடைகளை நடத்தி மக்களை மகிழ்விக்கலாமே?
ஏன் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் தான் மது விற்பனை செய்ய வேண்டுமா? ஏழைகள் ஈரல் தான் அரசுக்கு வேண்டுமா?

இந்தி திணிப்பைக் கொள்கையாகவே கொண்ட, பல உயிர்களை காவு வாங்கிய காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொண்டு, மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்க கூட்டம் நடத்த திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை.
இந்தி திணிப்பை விரட்டிவிட்டோம். ஆனால் அதை விட கொடியதாம், மாணவர்களிடம் புழங்கும் போதை வஸ்துக்களை ஒழிக்க முடியாத நிர்வாகத்தை விரட்ட வேண்டும். வருகின்ற 2026-ம் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இவை நடக்கும்.” என்றார்.
தொடர்ந்து இடியோசை கல்லணை குணா பேசுகையில் “கடந்த அலையிலும் திருச்சியில் வெற்றி பெற்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும் பொழுது,
அமமுகவில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் தேர்தல் சமயத்தில் ஓடிப்போன, மாமன்ற தேர்தலிலும் தோற்றுப் போன சீனிவாசனுக்கு அதிமுகவில் எப்படி மாவட்ட செயலாளர் பதவி வந்தது?
அமைச்சர் நேருவினால் இந்த பதவி வந்தது. அதை வைத்து திமுக வளர்வதற்கு உதவி செய்து அண்ணா திமுகவை காலி செய்கிறார்கள்” என பேசினார்..
தொட்டியம் ராஜசேகரன் பேசுகையில், “2006 ஆம் ஆண்டு லால்குடியில் இரண்டு ஏக்கர் வைத்திருந்த நேரு அவர்களுக்கு தற்பொழுது 1500 ஏக்கர், 90 பம்பு செட்டுகள் வைத்திருப்பதன் ரகசியம் என்ன?
வங்கியில் இருப்பு மட்டும் இரண்டாயிரம் சொச்சம் கோடிகள்.
ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா கூறியது போல் வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவில் நேருவின் கொட்டம் அடக்கப்படும். நேரு இல்லாத அரசியல் திருச்சியில் உருவாகும்.
திருச்சியில் உள்ள அத்தனை மதுபான கடைகளும் மூடப்படும்.” என்றார்.
தொடர்ந்து நிர்வாகிகள் தன்சிங், சௌகத் அலி, நெல்லை லட்சுமணன், டோல்கேட் கதிரவன், இடியோசை கல்லணை குணா, என்.எஸ். தருண், தண்டபாணி, துரைசாமி ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.
முடிவில் வட்ட செயலாளர்கள் சுடலைமுத்து மணிகண்டன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.