Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லட்சங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சஸ்பெண்ட், ஆனால் அரசு பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் டிஸ்மிஸ் 😭

0

'- Advertisement -

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன்  தனது தேர்தல் அறிக்கையில்  தெரிவிக்காத புதிய திட்டமான  தமிழகத்தில்  டவுன் பஸ்களில் பயணம் செய்ய  மகளிர்களுக்கு இலவசம்  என அறிவித்து இருந்தது . இது தற்போது நடைமுறையிலும் உள்ளது.

இந்த நிலையில்  சத்தியமங்கலம்: அரசு டவுன் பேருந்தில் மகளிர் கட்டணம் வசூலித்த கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு நேற்று சென்ற பி1 டவுன் பஸ்சில் நடத்துனர் தரணிதரன் சிறப்பு பஸ் எனக்கூறி மகளிர்களிடம் பயணச்சீட்டுக்கான கட்டணம் வசூலித்தார்.

இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அவர் கட்டணத்தை திருப்பி கொடுத்துள்ளார் .

Suresh

அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து சத்தி போக்குவரத்து கிளை மேலாளர் கூறுகையில்:

”பண்ணாரி செல்லும் பி1 அரசு டவுன் பஸ்சில் பெண் பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூல் செய்ததாக பயணிகள் சிலர் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்காலிக கண்டக்டர் தரணிதரன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் தினம் தினம் பல்வேறு இடங்களில்  புதிய ரேஷன் கார்டு வழங்க தாசில்தார் லஞ்சம் பெற்றார் , இடத்தை அளந்து கொடுக்க சர்வேயர் லஞ்சம் கேட்டார், வழக்குப்பதிாமல் இருக்க போலீசார் லஞ்சம் கேட்டார்  என பல செய்திகளை நாம் படித்திருக்கலாம், இதில் பல அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய போது  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

ஏன் பள்ளி சிறுமிகளை பலாத்காரம் செய்த அரசு பள்ளி  ஆசிரியர்களும் சிக்கியுள்ளனர்

 

இதுவரை அந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் ( சஸ்பெண்ட்) மட்டுமே செய்துள்ளனர் . யாரையும் டிஸ்மிஸ் செய்தது கிடையாது .

ஆனால் இந்த நடத்துனர் தற்காலிக பணியில் உள்ளதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.