குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு சோதனை.
இந்தியாவின் 76 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதமும் குறிப்பாக பொது இடங்களில் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனைகள் நடைபெற்றது.
திருச்சி விமான நிலையம், ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் திருச்சி ரயில்வே நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், ரயில்களில்
ஆய்வாளர் ஜாக்குலின், உதவி ஆய்வாளர் திருமலை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சேர்ந்து .மேற்கண்ட இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.