கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பணத்தை இழந்த திருச்சி பெல் நிறுவன சீனியர் மேலாளர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
திருவெறும்பூர்: திருச்சியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த மஞ்சித் சிங் (வயது 43), கடந்த 2023ல் டெல்லியில் இருந்து பணிமாறுதல் பெற்று சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி, பிட்காயின் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் மஞ்சித் சிங் பர்ச்சேஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்து வந்து அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற மஞ்சித் சிங், அலுவலக 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே மஞ்சித் சிங் உயிரிழந்தார். இதுகுறித்து பெல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.