திருச்சியில் ஒரு திருமயம் சம்பவத்தை பார்க்க வேண்டுமா? மணல் கொள்ளையை படம் எடுத்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த மேலூர் மணல் மாபியா கும்பல் .
திருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் மணல் மாபியா கும்பல் .
திருச்சியில் தற்போது வரை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் எங்கும் மணல் குவாரிகள் இயங்காத நிலையில் எவ்வித தங்கு தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையில் இருந்து எந்த ஒரு கட்டுப்பாடும், தட்டுப்பாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி மணல் அள்ளி வருகின்றனர் .
ஸ்ரீரங்கம் மற்றும் மேலூர் பகுதிகளில் இருந்து ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெருவில் நடைபெறும் ஒவ்வொரு புதிய கட்டிடங்கள் முன்பும் குவியல் குவியலாக ஈரம் சொட்டு சொட்ட டிப்பர் லாரிகளில் பிக்கப் வாகனங்கள் மூலம் மணல் வினியோகம் தாராளமாக நடைபெற்று வருகிறது .
இந்த மணல் கொட்டிய இடங்களில் படம் எடுக்க சென்ற உடன் சாக்குகளில் அடைத்தும் , சில இடங்களில் முழுவதுமாக தார்ப்பாய் போட்டு மூடியும் மணலை பாதுகாப்பாக வைத்துள்ளனர் .

இந்த மணல் கொள்ளையில் கட்சி பாடு பாடுகின்றி மணல் எடுக்கும் இடம் முதல் கொட்டப்படும் கட்டிடங்கள் முன் வரை மணல் வாகனங்கள் பாதுகாப்பாக செல்கிறதா என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முச்சாந்தியிலும் சம்பளம் கொடுத்து ஆட்கள் நியமித்து யார் வருகிறார்கள் என்பதை போன் கான்பிரன்ஸ் காலில் ஒருவருக்கு ஒருவர் தகவல் தெரிவித்து கனகச்சிதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி , உதவி கமிஷனர் விவேகானந்தா சுக்லா, ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் ஆகியோர் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவி இந்தத் தொடர் மண் திருட்டில் ஈடுபட்டு வரும் திமுக உள்ளூர் அமைச்சரின் ஆதரவுடன் செயல்படும் ஏ.வி.எம்.மணி.( இவர் மீது பல மணல் திருட்டு வழக்குகள் இருப்பதால் மணல் எடுக்க மாட்டேன் எனக் கூறி திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் உறுதி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார் ) தனது ஆட்கள் (விஜி, தியாகு, வெற்றிவேல் பிரபு, விஜயலட்சுமி சுரேஷ்,மூலம் இந்த மணல் திருட்டில் ஒரு குழு ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்.
இந்தக் குழுவில் உள்ள நபர் ஒருவர் படம் எடுத்தவரிடம் இந்தியா முழுவதும் A to Z ஊழல் நடைபெற்று வருகிறது. நீங்கள் செய்தி எழுதி என்ன ஆகப்போகிறது . மீறி செய்தி வெளியிட்டால் திருமயம் சம்பவத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என மறைமுக கொலை மிரட்டல் விடுத்துள்ளார் .
(புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) சமூக ஆர்வலர் கல்குவாரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தார், இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி லாரி ஏற்றி கொல்லப்பட்டார் . இதில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் )
இந்த மணல் திருட்டால் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது தான் இதன் அபாயம் அனைவருக்கும் தெரியவரும். ஆனால் அப்போது இது ஏதோ மண்ணரிப்பு எனக் கூறி சப்பக்கட்டு கட்டுவார்கள் , இன்னும் எத்தனை அணைக்கட்டுகள், பாலங்கள் , மின் கோபுரங்கள் சரிந்து வீழ உள்ளதோ என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடி நடவடிக்கை எடுப்பார்களா மாவட்ட கனிமவளத்துறை மற்றும் காவல்துறையினர் ?