Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தினம் 50 ஆயிரம் பேர் பயன்படுத்தும் வகையில் தயாராகி வரும் பஞ்சபூர் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு

0

'- Advertisement -

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை :

Suresh

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இதில் பொது மக்களுக்கு தேவையான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளீரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம் என பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
மேலும் இந்த பேருந்து முனையத்திற்கு நாள்தோறும் வட மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு என ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்
மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், காஜாமலை விஜி மண்டலகுழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி
உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.