திருச்சியில்
கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இ.பி ரோடு கமலா நேரு நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக உறையூர் நவாப் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது 22 ) என்ற வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
திருச்சியில் வெறும் 10 கிராம் கஞ்சா வைத்திருக்கும் நபரை கூட போலீசார் கைது செய்து வரும் நடவடிக்கை பொதுமக்களே பெரும் பாராட்டை பெற்று வருகிறது .
இதேபோன்று அனுமதி நேரம் இல்லாமல் டாஸ்மாக் கடைகளை மூடிய பின்பு இரவு 10 மணிக்கு மேல் அடுத்த நாள் டாஸ்மாக் திறக்கும் வரை குவாட்டருக்கு 150 ரூபாய் வரை அதிகம் வைத்து மது விற்பனை செய்யும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.