Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்.

0

'- Advertisement -

தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலாக தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது .

உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை அடுத்து திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை இக்கிராம மக்கள் பராம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர்.

அதன்படி, கோவிலில் பொங்கல் வைத்த பிறகு பிரசித்தி பெற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது.

எட்டு சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 800 காளைகளை அடக்க 500 காளையர்கள் அனுமதி பெற்று களத்தில் களமிறங்கினர்.

இன்று காலை 8 மணிக்கு திருவெறும்பூர் வருவாய் கோட்டாட்சியர் அருள் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டி தொடங்கும் முன் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். போட்டி தொடங்கியதும் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டது .

 

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும், இரண்டாவது பரிசாக எல்சிடி டிவியும் வழங்கப்பட உள்ளன. இதைத்தவிர, போட்டியில் பங்கேற்கும் காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப் பாய்ந்து வந்த காளை ஒன்று வேடிக்கை பார்த்த பார்வையாளர் ஒருவரை முட்டித் தூக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜல்லிக்கட்டு திடலில் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Suresh

படுகாயம் அடைந்தவரின் பெயர் மணிகண்டன் என கூறப்படுகிறது . அவர் திருச்சி பாலக்கரையை அடுத்துள்ள எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகிறது.

உச்சநீதிமன்ற வழிபாட்டுதலின்படி, வாடிவாசல், மேடை மற்றும் ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மைதானத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காளைகளால் ஆபத்து ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் பார்வையாளர் ஒருவரை காளை முட்டி தூக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க சார்பில் ரூ10, ரூ 20 பணத்தாள்களால் கட்டப்பட்ட ரூ 10 ஆயிரம் மதிப்பிலான பண மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை அபாரமாக ஆடி வெற்றி பெற்றது . காளைக்கு  சைக்கிள் பரிசாக கிடைத்தது .

அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி இல்லாத போதிலும் சரி அதிமுகவினர் திமுகவினரிடம் முகம் கொடுத்து கூட பேச மாட்டார்கள் அப்படி பேசினால் அடுத்த நொடி அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் . இதே நிலைதான் திமுகவிலும் இருந்து வந்தது.

திமுகவினர் மாற்றுக் கட்சியினருடன் நட்பு பாராட்டினால் கூட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை கண்டு கொள்ளவில்லை போன்று தற்போது தோன்றுகிறது. மதுரை அவனியாபுரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா  உடன் இந்நாள் அமைச்சர் மூர்த்தி சிரித்து பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில்

இன்று சூரியூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தற்போதைய பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கி பாராட்டியது திமுகவினரிடையே வியப்பை ஏற்படுத்தியது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.