திருச்சியில்
சம்பளத் தகராறில் ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த
5 பேர் சிக்கினர்; ஒருவருக்கு வலை .
திருச்சி முடுக்குப்பட்டி இரண்டாவது விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்கிற பன்னீர்செல்வம் (வயது 47) இவர் தனது நண்பர் ராகவேந்திரன் என்பவரும் முடுக்கு பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தனர். வெள்ளைச்சாமி பிளம்பராக பணிபுரிந்து வருகிறார் அவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
மேலும் ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் உள்ளார்.
இவர் திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெரு பகுதியைச் சேர்ந்த சந்தானம் (31) என்பவரிடம் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு சந்தானம் சம்பள பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சந்தானம் அதே பாரில் நேற்று மது அருந்த வந்தார். அப்போது பன்னீர்செல்வத்திற்கும் அவரது முதலாளி சந்தானத்துக்கும் இடையே சம்பள பாக்கி தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ரவுடி பன்னீர்செல்வம் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தானம்
தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே திருச்சி பாலக்கரை தாமோதர எடத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலாஜி (33) பாலக்கரை சாலை கோனார் தெரு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள்( 22 ) பாலக்கரை கீழப்புதூர் மூக்கன் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் ( 31) மரக்கடை கோகுல், பாலக்கரை தாமோதர எடத்தெரு பகுதியைச் சேர்ந்த ராம்குமார்( 30) ஆகிய 5 பேர் அங்கு வந்தனர். பின்னர்
வெள்ளைச்சாமி மதுபான பாரில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருக்கும்போது இக்பால் காலனி அருகில் அவரை
சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் மேற்கண்ட 5 பேரும் சேர்ந்து
இரும்பு ராடு மற்றும் உருட்டு கட்டை ஆகியவற்றில் தாக்கியுள்ளனர்.
இதில் வெள்ளைச்சாமிக்கு தலை மற்றும் கண் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு
சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு வெள்ளைச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வெள்ளைச்சாமியின் தம்பி நாகராஜ் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளை சாமியை கொலை செய்த அவரது முதலாளி சந்தானம் , நண்பர்கள் பாலாஜி, சீனிவாச பெருமாள், பாலமோகன்ராஜ், ராம்குமார் ஆகிய 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவான கோகுலை தேடி வருகின்றனர். சம்பள பாக்கி கேட்ட ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.