Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.155 டிக்கெட். கட்டைபைக்கு 500 ரூபாய் கேட்ட டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி விதவை பெண் கண்ணீர் புகார் .

0

'- Advertisement -

திருச்சியில் உள்ள கல்லணை பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் கணவரை இழந்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கல்லணையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகள்களுக்கு துணி, பலகாரம் வாங்கிவிட்டு, சொந்த ஊர் வருவதற்கு கோவையில் இருந்து திருச்சி பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது, அந்தப் பேருந்தின் நடத்துனர், பெண் வைத்திருந்த கட்டைப்பைக்கு ரூ.500 கூடுதலாக (லஞ்சம்) கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Suresh

ஆனால், தன்னுடைய பயணச்சீட்டு 155 ரூபாய் தான், அதே கட்டணத்தை தருகிறேன், இன்னொரு பயணச்சீட்டு வேண்டுமானாலும் கொடுங்கள் என ஷர்மிளா கூறியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நடத்துனர், அப்பெண்ணை நடுவழியிலே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு திருச்சி பேருந்தில் ஷர்மிளா ஏறியுள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை முதலில் இறக்கி விட்ட பேருந்து உணவு நிறுத்துமிடத்தில் இருந்துள்ளது. அங்கு இரண்டு பேருந்து நடத்துனர்களும் சந்தித்துள்ளனர்.

பின்னர், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அப்பெண்ணிடம் மற்றொரு பேருந்தின் நடத்துனரும் ரூ.500 லஞ்சம் கேட்டு, அதற்கு ஷர்மிளா தர மறுக்க, ஆட்கள் இல்லாத இடத்தில், நடுவழியில் இறக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணீருடன் காத்திருந்த பெண்ணுக்கு, அப்பகுதியை இருசக்கர வாகனத்தில் கடந்து சென்ற ஒருவர் அவருக்கு உதவியுள்ளனர்.
சர்மிளாவை இறக்கிவிட்டு சென்றுள்ளார். கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகத்தில் சர்மிளா நடந்ததை தெரிவித்து, சம்பந்தப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துவிட்டு, மீண்டும் மற்றொரு பேருந்தில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் உள்பட இது குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.