கல்லணை செல்லும் சாலையை சீரமைக்க கோரி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலெக்டரிடம் மனு.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, சர்க்கார் பாளையம், வேங்கூர் முதல் கல்லணை வரையில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன.
இப்பாதையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் ரோடு மிகவும் சேதம் அடைந்துள்ளது. பொது மக்கள் மிகவும் பாதிப்புகுள்ளாகிறார்கள், இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
திருச்சியில் உள்ள பிரபலமான முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கல்லணைக்கு அயல் நாட்டவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என சுற்றுலா தளத்திற்கு வருகை புரிய அனைவரும் அச்சப்படுகிறார்கள்.
எனவே இந்த அபாயகரமான சாலையினால் உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்கவும், புதிய சாலையை உடனடியாக அமைத்து தரக்கோரி,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உன்னால் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் பேரில்,
அமமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கல்லணை குணா திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.