திருச்சியில் குடிசைகள் தீயில் எரிந்து நாசம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அளித்த திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்.
திருச்சி சின்ன கடைவீதி அருகில் சித்து கண் மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த குடிசை வீடுகளில் நேற்று முன்தினம் ( வெள்ளிக்கிழமை) தீ பற்றி எரிந்தது.
இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் அந்த குடிசை வாசிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன், நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சி.அரவிந்தன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், வட்ட கழக செயலாளர் மலைக்கோட்டை ஆர் ஜெகதீசன், அவைத்தலைவர் ஏ.சுவாமிநாதன், பாசறை செயலாளர் இலியாஸ்,
வட்ட துணை செயலாளர் செல்வக்குமார்
இணைச் செயலாளர்கள் ஆர் கீதா ரவிச்சந்திரன் , எஸ் ரவிக்குமார், வட்டக்கழக பொருளாளர் எம். பாபுஜி
துணைச் செயலாளர் ஆர். சகுந்தலா தியாகராஜன்
8வது வட்ட கழக செயலாளர் பொன். அகிலாண்டம்
10வது வட்ட கழக செயலாளர் எம். வெற்றி வீரன் 14வது வட்ட கழக செயலாளர் ஜெயக்குமார்,
கழக செயல்வீரர் எனர்ஜி அப்துல் ரகுமான்
வட்ட பிரதிநிதிகள் ஆண்டாள் தெரு எஸ் சந்தோஷ் ராஜ், எல் ஐ சி பெரியண்ணன், ஆர் மருதை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.