ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு
திருச்சியில்
மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு.
திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையம் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும்,முன்னாள் எம்எல்ஏ யுமான
தமிமுன் அன்சாரி
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி இருக்கும் என கருதுகின்றோம்.

நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணிக்கு மீது வெளியிலும் உட்புறத்திலும் விமர்சங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்போடு, சிறந்த ஒருங்கிணைப்போடு இருக்கிறது என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வாயிலாகவும் நிரூபிக்க வேண்டி உள்ளது. நாட்டினுடைய நலனிலும் இந்த வெற்றி அடங்கியுள்ளது என்ற காரணத்தினால் உறுதியாக எங்களது களப்பணி அங்கே இருக்கும்.
பல்கலைக்கழகம் மானிய குழுவின் தேவையில்லாத திருத்தங்களை மேற்கொள்வது மூலம் கல்வியின் தரத்தை சீர்குலைக்க கூடிய முயற்சியாக இருக்கிறது என்பதை கருதுகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் சரியா நடக்காது எனக் கூறி தேர்தல் ஆணையத்தை அவமதித்துள்ளார்.
ஜனநாயகத்தில் சமநிலை இருக்கும் என்றால் எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போராட வேண்டும் அவர்களுக்கு பின்வாங்கி இருப்பது மூலமாக மோசமான தோல்வி ஒப்புக்கொள்ளுள்ளனர்.
மோசமான தோல்வி பயம் தான் அவர்கள் பின் வாங்கி உள்ளனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான இடப்பதிர்வை தரவேண்டும் என கேட்டிருந்தோம். அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வந்த பின் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை இடங்கள் என்பது பேச்சு வார்த்தையில் மூலம் தான் முடிவு செய்ய முடியும்.
நாடாளுமன்றத்தில் தொகுதி பெறக்கூடிய அளவில் எங்கள் கட்சி வளரவில்லை சட்டமன்றத்தில் வாய்ப்பு உள்ளது.
திராவிடக் கழகத்தினர் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கலாம்.
பெரியார் எல்லா கருத்தையும் நாம் ஒன்றுபட முடியாது பெரியார் கடவுள் இல்லை என சொல்லி இருக்கிறார்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கோபத்தில் கூறியிருக்கிறார்.
அதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறார்
திருக்குறளை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது காமத்துப்பாலை நீக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
பெரியாரின் சில கருத்துக்கள் காட்டமாக தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்
போது நிர்வாகிகள்
மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி முகமது ஷரிப், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆத்தூர் ரகுமான், மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன், அவைத்தலைவர் ஷேக் தாவூத், துணைச் செயலாளர்கள் தர்வேஸ், ஷேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி, ஹபீப் மற்றும் நிர்வாகிகள் அன்வர், ஜமீர்,ஜாக்கிர், யாசர், நியாஸ், ரபீக், சேக் உசேன், சீசம், ஹம்ருதீன், சாகுல் ஹமீத் இது உட்பட அணியின் துணை, பகுதி, கிளைக் கழக நிர்வாகிகள்
உடன் இருந்தனர்