திருச்சியில் யார் அந்த சார் ? இவன் தான் அந்த சார் . அதிமுக திமுக இடையே பேனர் போராட்டத்தால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே நேற்று காலை திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் யார் அந்த சார்? என்ற ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது .
இதனை முன்னிட்டு அப்பகுதியில் அதிமுக சார்பில் யார் அந்த சார்? என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது .
இதை பார்த்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் இவர் தான் அந்த சார் என்று எடப்பாடி படத்துடன் ஒரு மூதாட்டி கையை விடு பொள்ளாச்சி சம்பவத்திலேயே உன் லட்சணம் தெரிந்து விட்டது என்று கூறுவது போன்று படத்துடன் பதிலடி கொடுக்கும் விதமாக அந்த அதிமுக பிளக்ஸ் பக்கத்திலையே பிளக்ஸ் வைத்தால் கடும் கோபம் கொண்ட அதிமுகவினர் போலிசாரிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அதிமுக திமுக இருவரும் அனுமதியில்லாமல் பிளஸ் வைத்து உள்ளீர்கள் எனவே இரு தரப்பும் கிளட்ச் பேனரை ஆகட்டுங்கள் என இருதரப்பினரையும் அப்பறபடுத்த காவல்துறையினர் உத்தரவிட்டனர்.
இதனால் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .
இந்த பிளக்ஸ் போராட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது