திருச்சி அரியமங்கலம் அங்கன்வாடி குழந்தைகள் உடன் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை
(9 1.2025) திருவெறும்பூர் FEEL TRUST (பீல் டிரஸ்ட் ) மற்றும் அங்கன்வாடி மையம் திருவெறும்பூர் வட்டாரம் இணைந்து நடத்தும் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நடைபெற்ற பொங்கல் விழாவில் எஸ் ஐ டி கல்லூரி முதல்வர் டாக்டர் வி.ஜி. ரவீந்திரன் தலைமை உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கே. சியாரா பானு (Icdc,CDPO ) முன்னிலை வகித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக திருச்சி
நவல்பட்டு வட்டார மருத்துவர் அலுவலர் டாக்டர். தே. பாலமுருகன் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார்.
திருச்சி எக்விடாஸ் சி.எஸ்.ஆர். அலுவலர் பி. சுகுமாரன், அண்ணாவி, திருவெறும்பூர் பாரதிபுரம் சத்தியேந்திரன் ஆகியோர் பொங்கல் விழாவை துவங்கி வைத்தும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளையும் வழங்கினர்.
நடைபெற்ற பொங்கல் விழாவில் அங்கன்வாடியில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு உங்கள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் .
பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வை பீல் டிரஸ்ட் இயக்குனர் குணசேகர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள், பீல் டிரஸ்ட் குடும்பத்தினர் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர் .