21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் மறியல்.
காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருச்சியில் மறியல் போராட்டம்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்,
கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்,
கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல் மற்றும் இதற்கான ஆணையம் அமைத்தல் வேண்டும்.
நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில, மாவட்ட, வட்டார அளவில் ஏற்படுத்த வேண்டும் என்பன
உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் இன்று செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவ சகாயராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி
மாவட்ட செயலாளர் செந்தில் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் வேலாயுதம், தாப்பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பொன் மாடசாமி ஆகியோர் போராட்டத்தை கருவை எடுத்து பேசினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.