சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ராஜசேகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையிலும், யார் அந்த சார் என கண்டுபிடிக்காத நிலையில் தமிழகம் முழுவதும் இது குறித்து அனைத்துக் கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது .
திருச்சி மாநகராட்சி வளாக நுழைவாயிலில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை தேர்வுகளுக்கு தயார் ஆகி வரும் மாணவ மாணவிகள் அங்கு மூலை முடுக்கெல்லாம் அமர்ந்து படித்து வருகின்றனர். மதிய வேளையில் அங்கே மாணவ மாணவிகள் இல்லாமல் மனதை எதிரே உள்ள வணிக கட்டிடங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களும் இங்கே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு மாநகராட்சி கட்டிடத்தின் உள்ளே சென்று தங்களது டிபன் பாக்ஸ்களை குடிநீர் குழாய்களில் கழுவி விட்டு குடி தண்ணீரையும் வீணாக்கி செல்கின்றனர் . இதனால் மாநகராட்சி, பணியாளர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தால் குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை .

மாணவ மாணவிகள் இங்கு அமர்ந்து படிக்க நல்ல இடம்தான் . இவர்களுக்கு குடிநீர் தேவைக்காக ( பூங்காவிலேயே ) தனியாக வெளியிலேயே ஏற்பாடு செய்யுங்கள் என மேயரிடம் நேரடியாக பத்திரிகையாளர்கள் கூறியும் எந்த பலனும் இல்லை .
மேலும் மாநகராட்சி கேட்டில் மாலை வரை காவல் பணியில் யாரும் இல்லை . இருட்டும் வேளையில் பூங்காவில் ஏதாவது ( பாலியல் பலாத்காரம் போன்று) அசம்பாவிதம் நடந்தால் அதற்கு மாநகராட்சி தந்தை மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் பொறுப்பேற்பார்களா ? என இன்று மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளித்து விட்டு சென்ற சமூக ஆர்வலர்கள் நம் காதுபட பேசி சென்றனர் .