அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் கழக தலைமை நிலைய செயலாளரும், திருச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சிபிஐ மாநில தலைவர் சொன்ன கருத்து தான் திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளின் கருத்தும். இடிஅமீன், ஹிட்லர் ஸ்டைலில் முதலமைச்சர் ஆட்சி நடத்திக் கொண்டு வருகிறார். சட்டம், ஒழுங்கு தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது அனைத்து எதிர்கட்சியின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை அறிவிக்கின்றனர். இதையேதான் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் செயலுக்கு அரசு சரியாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சொல்வது நாடகம் என்று சொல்வது தவறு. நாடகம் நடத்தி வந்தவர்கள் என்பதால் அவர்கள் மற்றவர்கள் செயல்களை நாடகம் என சொல்கின்றன. இது தவறான முன் உதாரணம். தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சிஸ் இருப்பது என்பது உண்மை. சார் என்பது பற்றி எனக்கு தெரியாது ஆளுங்கட்சி அச்சமடைகிறது. மூன்று ஆண்டுகளாக சரியாக செயல்படுவது இல்லை என்பது தான் உண்மை. சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது காவல்துறையினர் ஏவல் துறையாக, கூலிப்படை அதிகமாக உள்ளது.
அதிக வேலையை வாய்ப்புகளை உருவாக்கும் என்ன சொன்ன முதல்வர், தற்போது கூலிப்படையினரை உருவாக்குவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறாரோ என்ற அச்சம் தமிழகம் முழுவதும் உள்ளது. முதல்வர் குடும்பத்திற்கு மட்டுமே பாதுகாப்பு உள்ளது. தமிழகத்தில் 25 வயது இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமையாக்கி வருகின்றனர். அதனை கடுமையாக சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு வேறு திசை திருப்ப முதல்வர் முயல்கிறார். இந்த ஆட்சி 200 சீட் ஜெயிக்க முடியாது. மீண்டும் திமுக ஆட்சி தொடராது.
திமுக மேடையில் வீரமாக பேசுவார்கள், பின்னர் பின்புற கதவை தட்டி சமாதான பேசுவார்கள். இது திமுகவின் ராஜதந்திரம். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியர் பிரச்சனைகள் நல்ல காவல்துறை அதிகாரிகளை வைத்து விசாரணை செய்வது தவறல்ல. சிபிஐ விசாரணை இருந்தால்தான் மாநில அரசு தலையீடு இல்லாமல் இருக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒரே கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பண பலம்மிக்க, ஆட்சி அதிகாரம் உள்ள திமுகவை வெல்ல தேசிய ஜனநாயக கூட்டணி தான் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும். கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடன் நான் தொடர்பு கொள்ளவில்லை.
2021 ஆம் ஆண்டு பழனிச்சாமி ஆட்சி மீது இருந்த அதிருப்தியால், கோபத்தால் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தார்கள். திமுக தோற்ப்பதற்கு உறுதியாகி விட்டதால் தான் கூட்டணியில் சலசலப்பு உள்ளது. பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் சிறுபான்மை எதிரானவர்கள் என தொடர்ந்து பொய் பிரச்சாரம் இருந்தது. இப்போது மக்கள் உணர்ந்து வருகின்றனர். 2026 தேர்தலில் கூட்டணி பலமாகிக்கொண்டிருக்கிறது. பழனிச்சாமி திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இரட்டை இலையை கையகப்படுத்தி உள்ளார், அம்மா கட்சியை கபளிகரம் செய்துள்ளார். அவருடன் இருப்பவர்கள் அவருக்கு காவடி தூக்கினீர்கள் என்றால் 26ல் அவர் கட்சிக்கு முடிவுரை எழுதிடுவார். பழனிச்சாமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. இதுவரை தப்பித்து வருவது திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதால் தான் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், புறநகர் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் , முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .