துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் பெண் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் .
துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் பாத்திமா மரியம் தாஹிரா என்ற பேராசிரியர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த வராமலும் அப்படி வகுப்புக்கு வந்தால் பாடம் நடத்தாமல் கிராமப்புறங்களில் இருந்து உயர்கல்விக்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் முழுமையாக தெரியாது என்று கூறியும் ஆங்கிலத்தில் பாடம் எடுப்பது மற்றும் புரியவில்லை என்று கேட்கும் மாணவர்களை மிரட்டுவது, திட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.
மேலும் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை மாணவர்கள் சரியான முறையில் அனைத்து செயல்பாடுகளையும் செய்தாலும் அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை குறைப்பதும் மற்றும் வருகை பதிவேட்டில் பதிவு செய்யாமல் ஆப்சென்ட் போடுவதும் மற்றும் வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு விட்டு வகுப்பறைக்கு வராமல் இருப்பதும் கேள்வி கேட்கும் மாணவர்களை மிரட்டுவதும், தகாத வார்த்தைகளில் திட்டுவதும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
மாணவர்கள் பலமுறை கல்லூரி முதல்வரிடம் இதனை கூறியும் கோரிக்கை மனுக்களாக அளித்தும் புகார் மனுக்களாக அளித்தும் கல்லூரி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் பேராசிரியருக்கு சாதகமாக இருந்து வந்துள்ளது.

இதனை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை இந்திய மாணவர் சங்கம் திருச்சி புறநகர் துவாக்குடி கிளையின் சார்பாக பேராசிரியரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்க துவாக்குடி கிளையின் கிளை செயலாளர் துளசிராம் தலைமையில் மாவட்டத் தலைவர் வைரவளவன் மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுன் மற்றும் புவியியல் துறையை சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பிறகு பேச்சுவார்த்தைக்கு வந்த கல்லூரி முதல்வர் நீங்கள் அளித்த புகாரின் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்துள்ளது ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் கல்லூரி நிர்வாகம் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்று கூறினார்கள், பிறகு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் தனக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறி கல்லூரி பேராசிரியர்கள் கவுன்சில் மீட்டிங்கை கூட்டி முடிவு எடுக்க படும் என்றும் நீங்க கலைந்து செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள் ஆனால் மாணவர்கள் கவுன்சில் மீட்டிங் நடைபெற்று முடியும் வரை நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகின்றோம், நீங்கள் கவுன்சில் மீட்டிங்கில் பேசி முடிவெடுத்து விட்டு பிறகு எங்களிடம் கூறுங்கள் நீங்கள் கூறும் கருத்து அல்லது நீங்கள் எடுக்கும் நடவடிக்கை சரியாக இருக்கும் என்றால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறினார். மற்றும் மாணவர்கள் உடனடி தீர்வு வேண்டும் என்றும் கூறினர் பிறகு கவுன்சில் மீட்டிங் நடைபெற்று முடிந்தவுடன் கல்லூரி முதல்வர் வெளியே வந்து மாணவர்களை சந்தித்து அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த கமிட்டியின் பரிந்துரையை உயர்கல்வி திருச்சி மண்டல இணை இயக்குனருக்கு அனுப்பி வைப்போம் என்றும் பிறகு அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதனை மறுத்த மாணவர்கள் மண்டல இணை இயக்குனர் இங்கு வரவேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகளாக கல்லூரி மாணவர்களின் படிப்பை பாழாக்கிய பேராசிரியர் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள் இதனை அடுத்து திங்கட்கிழமை விசாரணை கமிட்டி விசாரணை செய்யும் என்றும் அனைத்து மாணவர்களும் தங்களின் பிரச்சனைகளை கூறலாம் என்றும் உங்களுக்கு ஐந்து நாட்களில் தீர்வு கொடுக்கப்படும் என்றும் கூறினார்கள் இதனை மறுத்த மாணவர்கள் கால அவகாசம் அதிகமாக வழங்க முடியாது உடனடியாக இருந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் மற்றும் திங்கட்கிழமை விசாரணை கமிட்டி விசாரணை நடத்தி முடிந்தவுடன் கல்லூரி முதல்வர் கவுன்சில் மீட்டிங்கை கூட்டி உடனடியாக அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இதனை ஏற்றுக் கொண்டதால் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
திங்கட்கிழமை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தீவிரமாக தொடரும் என்றும் கூறினார்.