Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகி வரும் தனது காளைகளுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயிற்சி.

0

'- Advertisement -

 

தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டை முன்னிட்டு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு மாடுகள்.

இதனை முன்னிட்டு களமிறங்க தயாராகும் காளைகள்; தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.

Suresh

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது,

இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக்கள் போட்டிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுக்கள் 50க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது தோட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்,

இந்த நிலையில் குறிப்பாக அவர் வளர்த்து வரும் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கொம்பன் 2, கண்ணாவரம் உள்ளிட்ட காளைகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கரே நேரில் நின்று பயிற்சி அளிக்கும் ஒரு வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

பொதுவாகவே முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டு, சமூகப்பணி, இளம் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை துவக்கி வைத்து பரிசுகள் வழங்குவது என இளைஞர்களை கவர்ந்து வரும் வேளையில் தற்போது தனது காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்த வீடியோ ஆனது சமூக வலைதளத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.