ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்வசம் தொடங்கியது.

பாண்டியன் கொண்டையில் நம்பெருமாள் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் இன்று (31.12.2024) தொடங்கியது.
விழாவின் முதல் நாளான இன்று காலை, ஸ்ரீ நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து, மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், அதன் கீழ் தொங்கல் பதக்கம் ,மகர கர்ண பத்திரம், மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் ஸ்ரீரங்க நாச்சியார் பதக்கம், வைர ரங்கூன் அடிக்கை, கல் இழைத்த ஒட்டியாணம், மகரி, வெள்ளை கல் – சிகப்பு கல் என்று வரிசையாக மாறி மாறி அடுக்கு பதக்கங்கள், இரட்டை வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை, காசு மாலை,
பின்புறம் – புஜ கீர்த்தி, அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், திருக்கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தங்க தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதித்து வருகிறார்.