திருச்சியில் ஆமை வேக மேம்பாலப் பணிகளை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாநகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது.
பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம்.
திருச்சி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேச்சு.
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மாரிஸ் மற்றும் ஜங்ஷன் பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரியும்,திருச்சி மக்களுக்கு வரிகளை விதித்து வரும் மாநகராட்சியை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் சினீவாசன் முன்னிலை வகித்து பேசியதாவது:-

திருச்சி மாநகரில் மெயின் கார்டு கேட், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் உள்ளது.உறையூர் பகுதியில் இருந்து வரும் மாணவர்களை இந்த மாரிஸ் மேம்பாலத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.தற்பொழுது இந்த பாலப்பணி நடைபெறாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதே போல ஜங்ஷன் மேம்பாலமும் பணிகள் துரிதமாக நடைபெறாமல் இருக்கிறது. இதனால் மாநகரத்தின் உள் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உடனடியாக மேம்பால பணிகளை மேற்கொள்ள வேண்டும் .
மக்களுக்கு வரி மேல் வரி விதித்தும், அந்த வரிக்கு வட்டி போடும் திமுக அரசை அகற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என அவர் பேசினார்.
கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி
பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் கன்னியாகுமரியில் பேசும்பொழுது இந்த அரசு எவ்வளவு சிரமப்பட்டு நடக்கிறது தெரியுமா? மத்திய அரசு இதனை தடுத்து வருகிறது. என்று தன்னுடைய இயலாமையை முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டு பேசி உள்ளார்.கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசுக்கு நீதிமன்றம் எப்படிப்பட்ட கண்டனத்தை எல்லாம் தெரிவித்தது என்று நம் அனைவருக்கும் தெரியும் .அதிமுக ஆட்சி காலத்தில்
ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த இலவச மடிக்கணினி திட்டம், குடி பராமரித்து பணி, தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது . அதிமுக ஆட்சியில் பல்வேறு நெருக்கடி காலத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொகை வழங்கப்பட்டு வந்தது. கொரேனா காலத்தில் கூட முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்கு ரூ.2500 வழங்கினார்.
ஆனால் இந்த முறை திமுக அரசு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருக்கிறது.பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயை பொங்கல் தொகுப்புடன் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்
அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் கொண்டு வர பொதுமக்கள் தயாராகிவிட்டனர் இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் , மாண்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன் , ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், சிந்தை முத்துக்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் கவுன்சிலருமான கோ.கு.அம்பிகாபதி, இலக்கிய அணி செயலாளர் பாலாஜி , ஓட்டுநர் செயலாளர் ஞானசேகர், வர்த்தக அணி செயலாளர் ஜோசப் ஜெரால்டு , துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன் , கடை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்டு, ஐடி பிரிவு வெங்கட் பிரபு , பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா , ரோஜர் , கலைவாணன், ஏர்போர்ட் விஜி , அன்பழகன், வழக்கறிஞர்கள் அணி முல்லை சுரேஷ், சேது மாதவன் , நிர்வாகிகள் டி எஸ் எம் செல்வமணி , எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் , இன்ஜினியர் ரமேஷ் , கருமண்டபம் சுரேந்தர் , வண்ணாரப்பேட்டை ராஜன் , பாலக்கரை ரவீந்திரன், நத்தர்ஷா , எடத்தெரு எம்.கே. பாபு , ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன் , டாஸ்மாக் பிளாட்டோ , பொன் அகிலாண்டம் , கயிலை கோபி, செல்லப்பன், என்.டி. மலையப்பன், ஜெயந்தி சிவா மற்றும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .