பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்காத திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் .
மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மணப்பாறையில் மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் முகமது இஸ்மாயில்,
ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி.கார்த்திக், ராவணன், சூப்பர் நடேசன், நகர செயலாளர் எஸ்.பி. பாண்டியன், வக்கீல்கள் அழகர்சாமி, முருகன், இளைஞரணி சண்முக பிரபாகரன்
மற்றும் திரளான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.