திருச்சி மாநகர மேயர் அன்பழகன் வீட்டில் இதுபோன்று நடந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா? திருச்சி ரமணா
திருச்சி மாநகராட்சி ஒப்பந்த பணியின் அவலநிலை.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டு எண் 60 புதிய வார்டு எண் 8 உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பொது மக்கள் பயன்படுத்தும் கழிவறை கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வரும் மோட்டார் வேலை செய்யவில்லை எனக்கூறி மூடியே உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் .
இதுகுறித்து பலமுறை இளநிலை பொறியாளரிடம் சொல்லியும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுவே திருச்சி மாநகர மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன் ,உதவி ஆணையர் போன்ற அரசியல்வாதிகள், மாநகராட்சி அதிகாரிகளின் வீ்ட்டில் மோட்டார் பழுது அடைந்து விட்டால் சும்மா இருப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள்.
உடனடியாக மோட்டார் சரி செய்து கழிவறையை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடைபெறும் என திருச்சி தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா தெரிவித்துள்ளார்.