Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 1453 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது .

0

தமிழ்நாடு காவல்துறையில்,சட்டம் ஒழுங்கு பிரிவில்

1 453 உதவி ஆய்வாளர்கள் பதவி காலியாக உள்ளது

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்.

தமிழ்நாடு காவல்துறையில்,
பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடந்த 5 ஆண்டு காலமாக ஆயுதப் படையில் உதவி ஆய்வாளர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனை ஏற்று பதவி உயர்வு வழங்காமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகியவற்றில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. (தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்)
இதில் தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில், காவல் நிலையங்களில்
ஆயிரத்து 453 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், ஆயுதப்படையில் (ஏஆர்) 649 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும், சிறப்பு காவல் படையில் (டிஎஸ்பி) 117 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என காவல்துறையில் பணியாற்றியவரும் காவலர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.