திருச்சி மாவட்டம் முசிறி அருகே கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் நேற்று வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா்.

முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 40), இவா் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி இந்துமதி, சகோதரி ரூபிணி ஆகிய இருவரையும், ஏவூா் மேலத்தெரு சோ்ந்தவா்களான சேட்டு மகன் தாஸ் (23) பிரகாசம் மகன் பிரசாந்த் (24) ஆகிய இருவரும் குடிபோதையில் சென்று கத்தியை காண்பித்து தகராறு செய்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய தனது கணவா் ஐயப்பனிடம் அவரது மனைவி இந்துமதி விவரங்களை தெரிவித்துள்ளாா்.
இச்சம்பம் குறித்து ஐயப்பன் முசிறி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு பிரகாசம் மகன் பிரசந்த் (24) என்பவரை வெள்ளிகிழமை இரவு கைது செய்து, மேலும் தலைமறைவாக உள்ள தாஸை தேடி வருகின்றனா்.