தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மூலம் ரூ. 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த திருச்சி பிரபல லாட்டரி வியாபாரி எஸ்.வி.ஆர் மனோகரன் கைது. இவர் 26 வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமி சரவணனின் சித்தப்பா.
திருச்சியில்
லாட்டரி பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திமுகவை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி எஸ் வி ஆர் மனோகரன் உட்பட 5 பேர் கைது.
மேலும் மூன்று பேருக்கு வலைவீச்சு.
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 38).
இவர் திருச்சி புத்தூர் வயலூர் ரோடு சர்ச் காலனியைச் சேர்ந்த மனோகர் என்கிற எஸ் வி ஆர் மனோகரிடம் கேரளா லாட்டரி சீட்டு ஒன்று வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு ரூபாய் 25ஆயிரம் பரிசுத்தொகை விழுந்து உள்ளது.
இந்த பரிசுத் தொகையை மனோகர் மற்றும் அவரது கூட்டாளிகள் மலைக்கோட்டை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரங்கராஜன் (வயது 61) காளிமுத்து, பாஸ்கர், நெப்போலியன் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாதவன் கொடுத்த புகாரின் பேரில் மனோகர் மற்றும் ரவுடி ரங்கராஜன் ஆகிய இருவரும் பேரை கைது செய்தனர்.இதில் கைது செய்யப்பட்ட
மனோகர் திமுக பிரமுகர். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடை, புத்தூர் நால் ரோடு சிக்னல் அருகே ஹோட்டல் வைத்து வெளிஉலகை ஏமாற்றி வந்தாலும் இவரது மெயின் தொழில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி தான் ஆகும் . மாலை நேரத்தில் புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள அவருக்கு கடையில் தான் பரிசுத்தொகை வழங்கப்படும் . ஜீயபுரம், சிறுகமணி, பெருகமணி கரூர்,குளித்தலை, ஸ்ரீரங்கம், லால்குடி அரியலூர் வரை இவரது நெட்வொர்க் பரவி உள்ளது.
காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு காசை வீசி எறிந்தால் வாயை மூடி சென்று விடுவார்கள் என திமிராக பேசக் கூடியவர் தான் இந்த எஸ்.வி.ஆர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மூலம் ரூ.500 கோடிக்கு மேல் இவர் சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
(இவரிடம் இருக்கும் பணத்தை வைத்து இவரது தம்பி வரதராஜனின் மகள் விஜயலட்சுமிக்கு கவுன்சிலர் சீட்டு வாங்கி கொடுத்தார் . தற்போது கவுன்சிலராக உள்ள விஜயலட்சுமி சரவணன் கோ-புரம் மண்டலத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை தனது பணத் திமிரில் அனைவரையும் மிரட்டுவார் என அதிகாரிகளே புலம்புகின்றனர்.)
இந்த வழக்கில் மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோன்று திருவரங்கம் அம்மா மண்டபம் ரோடு கீதாபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (வயது 25)என்பவர்
அம்மா மண்டபம் ரோடு புது தெரு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் ஒரு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார். அதற்கான பரிசு தொகையையும் செல்வம் நூதன முறையில் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரவிந்தன் கொடுத்த புகாரின்பேரில் திருவரங்கம் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.
மேலும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வெளி மாநில லாட்டரி சீட்டு
விற்பனை செய்து பரிசுத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திருச்சி கல்லாங்குளம் நாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த கணபதி (வயது 72) ராமச்சந்திர நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 65)ஆகிய இரண்டு பேரையும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.
அரியமங்கலம், காட்டூர், அண்ணா வளைவு. திருவெறும்பூர், துவாக்குடி, தஞ்சாவூர் இந்த லைனில் வேதாரண்யம் வரை மற்றொரு பெரிய நபர் காவல்துறையில் சிக்காமல் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
எஸ் வி ஆர் மனோதரன் ஏற்கனவே பலமுறை சிறை சென்றவர் என்பதும் , குண்டாசு வழக்கில் சிறை வாசம் இருந்து வந்தாலும் தொடர்ந்து தனது லாட்டரி வியாபாரத்தை நடத்தி வருகிறார் . இது குறித்து கட்சி மேல் இடம் அதிர்ச்சி அடைந்துள்ளது .
மேலும் காவல்துறை சார்பில் இது குறித்து மேலிட விசாரணை நடத்தப்படும் என நம்பப்படுகிறது .