Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருந்து கிளம்பிய ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.150 பயணிகள் உயிர் தப்பினர்.

0

 

திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் , அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதே சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்டு இருந்த பயணிகள் அனைவரும் மீண்டும் விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து விமானத்தை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் விமானத்தை சரி செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்ட பயணிகளை தனியார் ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் விமானத்தை சரி செய்ய உதிரி பாகங்கள் விமான நிறுவனத்தின் சார்பில் இன்று கொண்டுவரப்பட்டு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று புறப்பட வேண்டிய விமானம், இன்று இரவு திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தெரிய வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.