உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மலை பகுதி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி பொன்மலை பகுதி திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் திமுக பொதுக்கூட்டம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி தி.மு.க. சார்பாக பொன்மலை பஸ் நிலையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொன்மலை பகுதி செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருமான கொட்டப்பட்டு இ. எம். தர்மராஜ் தலைமை தாங்கினார்.
இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி
500 பேருக்கு சேலை, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
மேலும் கூட்டத்தில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும்,மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான மதிவாணன்,
தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தலைமைக் கழக பேச்சாளர் திருவெறும்பூர் குமரவேல் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன், துணை மேயர் திவ்யா தனக்கோடி , வண்ணை அரங்கநாதன் ,டி எம் சபியுல்லா ,கவிஞர் சல்மா, பொதுக்குழு உறுப்பினரும் கவுன்சிலருமான கே.கே.கே. கார்த்தி, மாநில இலக்கிய அணி புரவலர் கவுன்சிலர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு , பொன் செல்லையா ,
கவுன்சிலர்கள் சீதாலட்சுமி முருகானந்தம், ரமேஷ்
உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.