Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

10-ம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி ? பலாத்காரம். குழந்தை பிறந்த பின் வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0

'- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் மாணவி தனது பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக, அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் ஒருவர் சரக்கு வாகனத்தில் வந்துள்ளார். மாணவி நின்று கொண்டிருப்பதை பார்த்த ஆகாஷ், அவரிடம் சென்று தான் பள்ளியில் விடுவதாக கூறி மாணவியை தனது வண்டியில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்லாமல், அத்திப்பாக்கம் காப்பு காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கதறி துடித்த நிலையில், நடந்த சம்பவத்தை குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்துப்போன மாணவி, சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, யாரும் எதிர்பாராத விதமாக மாணவிக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, தங்கள் மகளுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்று மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது, அவர் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அறிந்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், பள்ளி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 24 வயதான ஆகாஷ் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.