Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை முதல்வரிடம் நேரடியாக அளித்துள்ளேன் . பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

0

'- Advertisement -

 

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம கிழக்கு மாநகர திருவெறும்பூர் பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .

மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் , திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி , தலைமை கழக பேச்சாளர் காசிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் , மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் , மூக்கன், லிலாவேலு, துனைமேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், தர்மராஜ், பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே. கார்த்தி மற்றும் நிர்வாகிகள் சோமகுணநிதி, விஜயபாலன், அருண்குமார், கண்ணதாசன் மற்றும் மாவட்ட நகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றியதாவது:-

நாம் உழைத்து ஒன்றிய அரசிற்கு ஒரு ரூபாய் கொடுக்கிறோம் என்றால் அவர்கள் நமக்கு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா தான் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர்.

இன்று யாருடைய பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்றால் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவரக்கூடிய ஒவ்வொரு திட்டத்திற்கெல்லாம் அவருடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக நிர்வாக ரீதியாக தொடர்ந்து அந்த பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு முதல்வர் கொண்டு வரக்கூடிய கட்டணமில்லா பேருந்து, மகளிர்உரிமை தொகை , செல்வமகள் திட்டம்,தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டமாக இருந்தாலும் சரி மேலும் இதற்கு ஒரு படி மேலே கூற வேண்டும் என்றால் வரலாற்றிலேயே இல்லாத வகையில் முதல் முறையாக காலை உணவு திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் உணவு உண்டு பள்ளிக்கு செல்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கக்கூடிய தமிழக முதல்வரின் திட்டங்களை கையாள நிர்வாக ரீதியாக கையாளக்கூடிய ஒருவர் யார் என்றால் அது துணை முதல்வர் தான்.

ஒரு உழைப்பாளியாக தமிழகம் முழுவதும் சுழன்று வருகிறார் என்றால் அது துணை முதல்வர் தான். அப்படிப்பட்டவரின் பிறந்த நாளை தான் இன்று நாம் கொண்டாடி வருகிறோம்.

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 13 மாநகராட்சி உள்ளடக்கிய திருவெறும்பூர் தொகுதியில் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்றோம். அதில் வீட்டுமனை பட்டா, கலைஞர் உரிமைத்தொகை ஆகியவைதான் அதிகமாக இருந்ததாகவும் அனைத்து மனுக்களையும் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வழங்கி விட்டதாகவும், அந்த மனுக்களை முதல்வர் யாரிடம் ஒப்படைப்பார் என்றால் துணை முதல்வரிடம் தான் மேலும் துணை முதல்வர் எங்கு சென்றாலும் இதுவரை கலைஞர் உரிமைத்தொகை தமிழக முழுவதும் ஒரு கோடியே 55 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தற்பொழுது ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கிய வருவதாகவும் மேலும் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்து வருகிறார் என்றும் கூறினார்.

மேலும் மக்களுக்கு மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது ரெயின் கோட்டை அணிந்து தமிழக முதல்வரும் அவருக்கு உறுதுணையாக துணை முதல்வரும் வெள்ளத்தை நேரடியாக பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருவதாகவும் சென்னையில் மட்டும் தான் துணை முதல்வர் மழை வெள்ளத்தை பார்வையிட்டாரா என்றால் இல்லை கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்றும் நேரில் மக்களை சந்தித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியவர் தான் துணை முதல்வர் என்றும், ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசாணை நாம் உழைத்து ஒரு ரூபாய் கொடுப்பதாகவும் ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி வெறும் 29 பைசா மட்டுமே கொடுப்பதாகவும் மீதமுள்ள தொகையை வேறு மாநிலங்களுக்கு செலவிடுவதாகவும் எடுத்துரைத்தார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.