டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
திருச்சி காஜாமலை பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி .
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்ட காஜாமலை பகுதி செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்கள் ஏற்பாட்டில்,
மாவட்டத் துணைச் செயலாளர் தன்சிங் அவர்கள் தலைமையில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்கள்,
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, 57வது வார்டில் கழகக் கொடியினை ஏற்றினார்.
இதேபோல் 62-வது வார்டில், வட்டச் செயலாளர் ஸ்டீபன் அவர்கள் ஏற்பாட்டில், அமமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் மகளிர் அணி மகாலட்சுமி உட்பட மாவட்ட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.