திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பொய் பாலிய புகார் அளித்த ஆசிரியைகள் 2 பேர் சஸ்பெண்ட்
திருச்சி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய மோதல் போக்கைத் தொடர்ந்து இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயான்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய அன்பரசனுக்கும் அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் ஆா்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடா்பாக மோதல் போக்கு இருந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல கே. கிருஷ்ணப்பிரியா பள்ளிக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.
இதற்கிடையே அன்பரசன் மீது எழுந்த பாலியல் புகாரில் தனியாா் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர் பேபி தலைமையிலான குழுவினர், பள்ளி கட்டமைப்பு குழுவினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலியல் புகாரில் உண்மை இல்லை என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடாபாக சமூக நலத்துறைக்கு சென்ற புகாா் மீதான விசாரணை டிசம்ப் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இச்சூழலில், பிரச்னைக்குரிய மூவரும் ஒரே இடத்தில் பணியாற்றினால், மேலும் பிரச்னை தொடரும் என்பதைக் கருத்தில் கொண்டு, மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில், தலைமை ஆசிரியர் அன்பரசன் வி.பூசாரிப்பட்டி அரசு உயாநிலைப்பள்ளிக்கும், ஆசிரியை ஆா்ச்சனா இனாம் மாத்துா் அரசு மேல்நிலை பள்ளிக்கும், ஆசிரியை சுதா என். பூலாம்பட்டி அரசு உயர்நிலை பள்ளிக்கும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டது.
இவா்களில் தலைமை ஆசிரியர் அன்பரசன் மட்டும் அந்தப் பள்ளியில் சோந்தாா்.
ஆனால், ஆசிரியைகள் இருவரும் தங்களுக்கு மாறுதல் உத்தரவை வாங்க மறுத்து, மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர்.
இதற்கிடையே தலைமை ஆசிரியர் அன்பரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவலறிந்த கிராம மக்கள், புதன்கிழமை அன்று பள்ளியில் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். அவர்களுடன் கல்வி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
இந்நிலையில், அன்பரசனுடன் தொடா்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த ஆசிரியைகள் ஆா்ச்சனா, சுதா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவாலர் கிருஷ்ணப்பிரியா நேற்று வியாழக்கிழமை மாலை உத்தரவிட்டார் .