திருச்சி: மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் நவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவினை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார் .
மணப்பாறை ஸ்ரீ குமரன் மருத்துவமனையில்
நவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பிரிவு. திருச்சியில்
அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஸ்ரீ குமரன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு புதிதாக அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா திருச்சி கோர்ட் யார்டு மாரியட்
ஹோட்டலில் நடைபெற்றது.
விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
ரோபோட்டிக்
சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- திருச்சியை தாண்டி துறையூர் ,முசிறி, லால்குடி போன்ற நகராட்சி பகுதிகளில் இல்லாத மருத்துவமனைகள் மணப்பாறையில் உள்ளன. இங்குள்ள டாக்டர்கள்
மக்களுக்கு குறைந்த செலவில் உயர் சிகிச்சை அளிக்கிறார்கள்.
திருச்சி மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்
விஜயகுமார் மணப்பாறையில் சொந்தமாக மருத்துவமனை தொடங்கி அந்தப் பகுதி மக்களுக்கு இன்றைக்கு பணியாற்றி வருகிறார்.
அவர் குறைந்த செலவில் உயர்தர
ரோபோடிக் சிகிச்சை அளிப்பதாக இங்கு உறுதி அளித்துள்ளார். இது மணப்பாறை மட்டுமல்லாமல் திருச்சி மக்களையும் குமரன் மருத்துவமனைக்கு
நிச்சயம் அழைத்து வரும்.
60 வயதுக்கு மேல் மூட்டு பிரச்சனை வந்துவிடுகிறது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு
நல்ல தீர்வாக இருக்கும்.
மேலும் குமரன் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மக்களுக்கு குறைந்த செலவில் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்க மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
விழாவில்
மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ.,ஜான்சன் அண்டு ஜான்சன் மெட் டெக் இந்தியா தேசிய விற்பனை இயக்குனர் எஸ். மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்ரீ குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
பி.எல். விஜயகுமார் வரவேற்று
பேசும்போது, மணப்பாறையில்
7 ஆண்டுகளுக்கு முன்பு குமரன் மருத்துவமனை எங்கள் குடும்பத்தின் சார்பாக தொடங்கப்பட்டது. உயர் சிகிச்சை உங்கள் அருகில் என்ற உன்னத நோக்கோடு ஒவ்வொரு ஆண்டும்
உலகில் உள்ள நவீன தொழில்நுட்ப மருத்துவ வசதிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி தொடங்கப்பட்டது.
கடந்தாண்டு எண்டோஸ்கோபி (நுண் துவார முதுகெலும்பு அறுவை சிகிச்சை) தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.
தற்போது 8வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நவீன யு. எஸ். ஏ. டெக்னாலஜியில்
ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சிடி ஸ்கேன் மற்றும் எம். ஆர். ஐ.ஸ்கேன் தேவை இல்லை.
ஆப்ரேஷன் செய்யும் அதே நாளில் நோயாளி நடக்கலாம்.
குறைந்த வலி மற்றும் இரத்த இழப்பு மட்டுமே இருக்கும்.
கச்சிதமான பொருத்தம் மற்றும் சிறந்த இயக்கம் இருக்கும். எங்கள் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீ குமரன் மருத்துவமனை இயக்குனர்
டாக்டர் சி .பழனியப்பன்
வாழ்த்துரை வழங்கினார். மேலும் விழாவில் மணிகண்டம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் மாத்தூர் கருப்பையா, தென்னலூர் பழனியப்பன்,
சேதுராப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்க ரத்தினம் , முன்னாள் பகுதி செயலாளர் கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வம், புஷ்பராஜ், புத்தூர் தர்மராஜ்,
டாக்டர்கள் ஸ்ரீ ரேணுகாதேவி, டாக்டர் எம். ஜெயப்ரியா, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.