திருவானைக்காவலில்
கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது.
மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (வயது 24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
முகேஷ் பஸ்வான் திருவானைக்காவல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த திருவானைக்காவல் வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் (வயது 20 ) என்ற வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி முகேஷ் பஸ்வான் யிடமிருந்து ரூ.1000 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார் .
இது தொடர்பாக முகேஷ் பஸ்வான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவானைக்காவல் கீழே கொண்டையம்பேட்டை
பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.