கேகே நகரில்
மளிகை கடை பூட்டை உடைத்து
ரூ.2 80 லட்சம் பணம் கொள்ளை
மர்ம ஆசாமிகளுக்கு வலை.
திருச்சி கே.கே. நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34) இவர் எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 13 ந்தேதி கடையை பூட்டி விட்டு அப்துல் சலாம் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் காலையில் கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பணபெட்டியில் இருந்த ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பிறகு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது மளிகை கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது