ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் .

திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்புகளையும், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளையும் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் முதல் கட்டமாக, திருச்சி மாநகராட்சியின் 4ஆவது மண்டலத்துக்குள்பட்ட ரெனால்ட்ஸ் சாலை, ஒய்டபிள்யூசிஏ, ராயல்ஸ் சாலை, வில்லியம்ஸ் சாலை, வாா்னா்ஸ் சாலை, ராக்கின்ஸ் சாலை, ஹீபா் சாலை, பாரத ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தள்ளுவண்டி வாகனங்களையும் அகற்றிக் கொள்ள வேண்டும் என ஒலி பெருக்கி கட்டப்பட்ட ஆட்டோ மூலம் ஒவ்வொரு சாலைக்கும் சென்று புதன்கிழமை எச்சரிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து காவல்துறை பாதுகாப்புடன் இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்பட உள்ளன.