Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாக்டர், செவிலியர் செய்கிற வேலையா இது ? திருச்சி சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை .

0

 

திருச்சி சோமரசம்பேட்டையில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய போலிச்சான்று.
திருச்சி டாக்டர்,செவிலியர் மீது வழக்கு.

திருச்சி, வயலூர் சாலை வாசன் நகர் 7 ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்த விமல்ஆனந்த் (வயது32). இவர் திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், வயலூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற நபர், அவரது ஆதார் அட்டையில் திருத்தம் செய்தவற்கான மருத்துவர் சான்றிதழ் பெற்றுள்ளார்.

அதில், எனது (விமல் ஆனந்தின்) கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி, சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர், செவிலியர் ஆகியோர் போலிச் சான்று வழங்கியுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.