திருச்சி உறையூரில் தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகர் (வயது 56) தச்சு தொழிலாளி.இவர் குடிப்பழக்கம் உள்ளவர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு சென்ற அழகர் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு உள்ளே இருந்தார். மறுநாள் காலை கதவு திறக்கவில்லை. இதனால் விட்டிற்கு சந்தேகப்பட்டு வந்த உறவினர் கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காத காரணத்தால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அங்கு அறையில் வீட்டுக்குள் அழகர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி உறையூர் போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.