ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி .
மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (வயது40). இவரது தாயார் சுகாய மாலிக் (வயது65) இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி திருவரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சுகாயா மாலிக்கிற்கு இடுப்பு கை மற்றும் உடல் முழுக்க பலத்த காயங்கள் ஏற்பட்டது . இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு மருத்துவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி பரிந்துரைத்தனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
சுகாயாமாலிக் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய திருவரங்கம் ஆர் எஸ் சாலையை சேர்ந்த தாமோதரன் என்பவரின் ஆட்டோவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.