40 ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருச்சி கருமண்டபம் ஆரோக்கிய மாதா பள்ளி எறிபந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சி பள்ளி .
பாரதியார் தின விளையாட்டு விழாவில் மாநில அளவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் திருச்சி கருமண்டபம் ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளிப்பதக்கம் வென்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் 40-வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் திருச்சி மாவட்டத்தின் சார்பாக கருமண்டபம் ஆரோக்கியமாதா பள்ளி அணியும் சென்னை மாவட்ட அணியும் மோதின. போட்டி முடிவில் திருச்சி ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளிப்பதக்கம் வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ந.கேசவனையும் பள்ளி தாளாளர் அருட்தந்தை அ.ஜெயராஜ் மற்றும் தலைமை ஆசிரியர் இ.ஜஸ்டின் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினார்கள்.