சி.எஃப்.டி.யூ.ஐ மூலம் தொழிலாளர்களுக்கு ஆறு மாத பயிற்சி வகுப்பும் முடிவில் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது .
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திராணி ஜானகிராமன் கல்யாண மண்டபத்தில் சிஎஃப்டியூஐ
(CFTUI) சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் மத்திய அரசு சார்ந்த நல வாரியத் திட்டங்களும் செய்து கொடுக்கப்பட்டது.
இதற்கு பெரும் உதவியாக இருந்தது டிபிஎஸ் (DBS) நிறுவனம், சம்பவ் பவுண்டேஷன் (Sambhav Foundation) நிறுவனம் இணைந்து ஆறு மாத கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
பயிற்சி கால முடிவின்போது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இவை அனைத்தையும் மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி நடத்தினார் . Sambhav Foundation நிறுவனத்தின் ஊழியர் முரளி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சேட்டு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஞானசேகர் வருகை தந்த தொழிலாளர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.