நமது மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசிடம் தான் உள்ளது என்பதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் நமது தமிழக துணை முதல்வர் தான்.திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு .
ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 29 பைசா மட்டுமே நமக்கு கொடுக்கிறது:
நமது மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசிடம் உள்ளது
திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் காந்திமார்க்கெட் பகுதி திமுக சார்பாக தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பகுதி கழகச் செயலாளர்
ஆர்.ஜி பாபு தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.
மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன்.
திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் மாவட்டத் துணைச் செயலாளர் லீலாவேலு, தலைமைக் கழக பேச்சாளர் உதயகுமார்,கவுன்சிலர் சாதிக் பாஷா, பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக்
வட்டக் கழகச் செயலாளர்கள் சுருளி ராஜன், செந்தில்குமார், மகேஷ், பைரவன், மற்றும் பகுதி, நகர, மாவட்ட, கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
நமது துணை முதலமைச்சர் பிறந்த நாளை நாம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம் .
நமக்கான ஒரு இளம் தலைவராக, தமிழினத்தை பாதுகாக்க கூடிய ஒரு தலைவராக தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு தலைவராக அவரை நாம் பார்க்கிறோம்.
அவரை நாம் ஏன் பாராட்டுகிறோம் என்றால் இந்த திராவிட இனத்தை உயர்த்திப் பிடிக்க நமக்கான ஒரு பாதுகாவலர் வேண்டும் என்பதற்காகத்தான். திமுக அரசில் உள்ள அமைச்சர்கள் இறுமாப்பு உள்ளவர்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா கூறியது போல் நாங்கள் சாமானியர்கள்.
மிக மிக எளிமையானவர்கள் . ஏனென்றால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்படித்தான் எங்களை வளர்த்து வருகிறார்.
நமது மாநில உரிமைகள் யாரிடம் இருக்கிறது என்றால் ஒன்றியத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பிஜேபி அரசிடம் தான் உள்ளது . குறிப்பாக நமது உழைப்பில் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம். ஆனால் நமக்கு மத்திய அரசு கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே. இதை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோல் உரித்து வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் தமிழக துணை முதல்வர் தான் .
இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் நமது கழுத்தை ஒருவர் நெரிக்கிறார். அந்த ஆதங்கத்தை நாம் கூறும் பொழுது அவரே நம் பாதுகாப்பிற்கு வென்டிலேட்டர் வைக்கிறார் என்றால் அது வேண்டாம் எங்கள் கழுத்தை நெரித்து நீங்கள் கொடுக்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள ஒரு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தர வேண்டிய ரூ. 37,000 கோடியை தராமல் அதற்கு பதிலாக வெறும் ரூ.200 கோடியை கொடுக்கிறது பாஜக அரசு. 2014 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரை கட்டப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கலை உயர்த்தி காட்டியவர் தான் துணை முதலமைச்சர். இன்றைய ஒன்றிய அரசுக்கு சவாலாக இருக்கக்கூடியவரும் துணை முதல்வர் .
நான் பொறுப்பு அமைச்சராக இருப்பதால் நாகப்பட்டினத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் உத்தரவின் பேரில் அந்தந்த அமைச்சர்கள் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் தொகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு அதற்கு உண்டான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
.இதே போல் எனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளை அழைத்து விரைவாக பணியை முடிக்குமாறு கூறிவிட்டு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.